இந்தியா கால்பந்து வீரர் சுனில் சேத்ரிக்கு கொரோனா தொற்று
covid
india
Sunil Chhetri
foot ball
By Jon
தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்தியா கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணி, துபாயில் நடைபெறும் சர்வதேச நட்புறவு போட்டிகளில், ஓமன் (மார்ச் 25) மற்றும் ஐக்கிய அரபு அமீரக (மார்ச் 29) அணிகளை எதிர்த்து விளையாட உள்ளது.
இதற்கான பயிற்சி முகாம் துபாயில் வரும் 15ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டனும், நட்சத்திர ஆட்டக்காரருமான சுனில் சேத்ரிக்கு (வயது 36) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் தற்போது நடைபெற உள்ள நட்புறவு கால்பந்து போட்டிகளில் அவர் பங்கேற்பது கேள்வி குறியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.