ஞாயிறு முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்- தீவிர சோதனையில் காவல் துறையினர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி ஆட்கள் நடமாட்டம் இன்றி காணப்படுகின்றன.
அவசர தேவை இல்லாமல் செல்லும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் காவல்துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கடைகள் அடைக்கப் பட்டுள்ளன. ஆட்டோ, டாக்சி ,மற்றும் கார், இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
காய்கறி சந்தை கடைவீதி மற்றும் இறைச்சி கடைகள் மூடப்பட்டுள்ளன சுற்றுவட்டார இடங்களில் அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது,.
அதே சமயம் இன்று முகூர்த்த நாள் என்பதால் இ-பாஸ் பெற்று செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன .
.எப்போதும் அதிகளவு போக்குவரத்து இருக்கும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலும் வாகனங்கள் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
மருந்து மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.