சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்- திருமணம் எப்போது தெரியுமா?
சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் தனது நீண்ட நாள் காதலி அபியாத்ராவை கரம்பிடிக்கவுள்ளார்.
ஜிஷ்ணு மேனன்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிய சுந்தரி சீரியல் மூலம் அறியப்பட்டவர் தான் ஜிஷ்ணு மேனன்.
இவர் நாயகியை ஏமாற்றும் கணவராக கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதனை தொடர்ந்து தற்போது ரோஜா - 2 என்ற சீரியலிலும், நடிகை ரேஷ்மா முரளிதரன் நாயகியாக நடிக்கும் புதிய தொடரிலும் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கிடையில் ஜிஷ்ணு மேனன், ஒப்பனைக் கலைஞர் அபியாத்ராவை நீண்ட நாள்களாக காதலித்து வந்தார்.
எளிமையாக முடிந்த நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், ஜிஷ்ணு மேனன் - அபியாத்ராவுக்கு சில நாட்களுக்கு முன்னர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முன்னிலையில், நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்போது எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதற்கு சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஜிஷ்ணு மேனன் - அபியாத்ரா திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி நிலையில், சின்ன திரை பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்ரனர்.
மேலும், இவர்களது திருமணத் தேதி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.