Tuesday, Jun 3, 2025

வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படிதான் பண்ணுவாரு - சுந்தரா டிராவல்ஸ் நடிகை பளீச்!

Radha Tamil Cinema Vadivelu Tamil Actress
By Jiyath 2 years ago
Report

சுந்தரா டிராவல்ஸ் திரைப்பட நடிகை ராதா நடிகர் வடிவேலு குறித்து பேசியுள்ளார்.

நடிகை ராதா

இயக்குநர் தாஹா இயக்கத்தில், நடிகர் முரளியின் நடிப்பில் வெளிவந்த "சுந்தரா டிராவல்ஸ்" என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராதா. முதல் படத்திலேயே அவரின் சிறப்பான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து கேம், அடாவடி, காத்தவராயன் ஆகிய திரைப்படங்களில் நடித்தார்.

வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படிதான் பண்ணுவாரு - சுந்தரா டிராவல்ஸ் நடிகை பளீச்! | Sundara Travels Actress Radha About Vadivelu

பின்னர் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் தற்போது சீரியலில் நடித்து வருகிறார். அண்மையில் பிரபல யூடியூப் சானெல் ஒன்றுக்கு பேட்டியளித்திருந்தார் ராதா. அப்போது அவரிடம் "ஒரு தரப்பு வடிவேலு நமக்கு திரைப்படத்தில் ஸ்பேஸ் தரமாட்டார் என்று கூறுகிறார்கள், இன்னொரு தரப்பு வடிவேலு நிறை உதவி செய்வார் என்று கூறுகிறார்களால்.

அவருடன் சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நீங்கள் நடித்துள்ளீர்கள். அவரை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது.

பேட்டி

அதற்கு பதிலளித்த ராதா "வடிவேல் சார் ரொம்ப கோப்ரேட் பண்ணுவாரு, அன்பா இருப்பாரு, ரொம்ப நட்பா இருந்தாரு. டயலாக்ஸ் எல்லாம் நான் எப்படி பேசுகிறேனோ, அதற்கு கோப்ரேட் பண்ணி பண்ணுவாரு. இப்போ வடிவேல் சார் எப்படினு எனக்கு தெரியாது.

வடிவேலு ஷூட்டிங் ஸ்பாட்டில் அப்படிதான் பண்ணுவாரு - சுந்தரா டிராவல்ஸ் நடிகை பளீச்! | Sundara Travels Actress Radha About Vadivelu

அப்போ ரொம்ப உதவி பண்ணுவாரு. அந்த பொறாமை எல்லாம் அவர்கிட்ட இல்ல. ஷூட்டிங் ஸ்பாட்டில் நானும், அம்மாவும், வடிவேல் சாரும் ஒன்னாதான் அமர்ந்து சாப்பிடுவோம். என்னுடைய அம்மாவை பார்த்ததும் "பவானி அம்மா வா..மா" என்று கூப்பிடுவார். நாங்கள் ஒன்னாதான் அமர்ந்து சாப்பிடுவோம்" என்று ராதா பேசியுள்ளார்.