சுந்தர் பிச்சைக்கு கூகுள் வழங்கிய புதிய சம்பளம்
கூகுள் (Google) தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் 6361 கோடி ரூபாய் மொத்த சம்பளமாக பெறலாம் என கூறப்படுகிறது.
இதன்மூலம் உலகளவில் அதிக ஊதியம் பெறும் நபராக மாறவுள்ளார்.
அமெரிக்காவின் Financial Times வெளியிட்டுள்ள செய்தியில்,
Alphabet நிறுவனத்தின் பங்குச்சந்தை செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு, 126 மில்லியன் டொலர் மதிப்புள்ள பங்குகள் இரண்டு பகுதிகளாக வழங்கப்படுகின்றன. இலக்குகளை கடந்தால் இது 252 பில்லியன் டொலர் வரை உயரக்கூடும்.

மேலும் சுந்தர் பிச்சைக்கு 84 மில்லியன் மதிப்புள்ள Restricted Stock, மூன்று ஆண்டுகளில் மாதந்திரமாக வழங்கப்படும். அதோடு, வருடாந்திர சம்பளமாக 2 மில்லியன் டொலர் வழங்கப்படுகிறது.
Alphabet நிறுவனம் Wamyo (தானியங்கி வாகனங்கள்) மற்றும் Wing Aviation (ட்ரோன் டெலிவரி) ஆகிய துறைகளில் வளர்ச்சியை ஊக்குவிக்க, 350 மில்லியன் டொலர் மதிப்புள்ள புதிய பங்கு ஊக்கத்தொகைகளையும் அறிவித்துள்ளது.
சுந்தர் பிச்சை 2015-ல் CEO ஆனதிலிருந்து, கூகுளின் சண்டகி மதிப்பு 535 பில்லியனிருந்து 3.6 ட்ரில்லியன் வரை வரை 7 மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், உலகின் மிக அதிக சம்பளம் பெரும் நிர்வாக அதிகாரிகளில் ஒருவராக அவர் திகழ்கிறார்.