சுந்தர் பிச்சை மீது உபி போலீஸ் வழக்கு- காரணம் என்ன?
கடந்த வாரம் பிரதமர் மோடிக்கு அவதூறு ஏற்படுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. முதலில் வாட்ஸ் ஆப், பின்னர் யூடியூப்பிலும் வைரலானது. அந்த வீடியோவை இது வரை 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு வாரணாசியை சேர்ந்த ஒருவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இதன் காரணமாக அவருக்கு 8,500 செல்போன் மிரட்டல்கள் வந்துள்ளது. இதனால் அவர் கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை மற்றும் 17 பேர் மீது பெலுபூர் காவல் நிலையத்தில் கடந்த 6ம் தேதி அவர் புகார் கொடுத்தார். புகாரினை எடுத்துக்கொண்ட காவல்துறை சுந்தர் பிச்சை மற்றும் கூகுள் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரிகள் 17 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
விசாரணையில் சுந்தர்பிச்சை மற்றும் கூகுள் தலைமை அதிகாரிகள் 3 பேர் தொடர்பு இல்லை என்பதால் அவர்களின் பெயர்களை காவல்துறையினர் நீக்கி உள்ளனர்.