அப்பாவோட 1 வருட சம்பளத்தில் விமான டிக்கெட்; அதனால்தான் இந்த நிலை - சுந்தர் பிச்சை!
சுந்தர் பிச்சை தனது பயண அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார்.
சுந்தர் பிச்சை
யூடியூபர் டியர் கிளாஸ் ஆஃப் 2020 என்ற நிகழ்ச்சியில் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை(52) பேசினார்.
அப்போது, “முதன்முறையாக நான் அமெரிக்கா வந்தபோது, எனது தந்தை, அவரது ஒரு வருட சம்பளத்தை செலவழித்தார். அதனால்தான் நான் ஸ்டான்போர்ட் வர முடிந்தது. நான் விமானத்தில் பயணித்தது அதுதான் முதன்முறை.
அனுபவம்
அமெரிக்காவில் செலவு மிகவும் அதிகம். எனவே, நான் வீட்டிற்கு ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றால், 2 டாலர்கள் செலவாகும். அதிர்ஷ்டத்தை தவிர, தொழில்நுட்பம் மீதான ஆர்வமும், திறந்த மனமும்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.
மாணவர்கள் திறந்த மனதுடன், பொறுமையாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள். சிறு வயதில் தொழில்நுட்பம் எனக்கு பெரிதாக கிடைக்கவில்லை. 10 வயது வரை முதல் தொலைபேசி கிடைக்கவில்லை. நான் அமெரிக்காவிற்கு வரும் வரை எனக்கு கணினி பயன்படுத்த தெரியாது” எனத் தெரிவித்துள்ளார்.
சுந்தர் பிச்சையின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு, ஒரு பில்லியன் டாலராக (இந்திய ரூபாயில் சுமார், 8,342 கோடி ரூபாய்) உள்ளது.