சென்னை பையன் எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்த சுந்தர் பிச்சை; பிரியங்கா சோப்ரா ரியாக்ஷன் - அடுத்து நடந்தது?

Google Tamil nadu Chennai Priyanka Chopra Sundar Pichai
By Jiyath Nov 14, 2023 09:25 AM GMT
Report

சென்னையை சேர்ந்த புகைப்பட கலைஞர் கூகுள் பிக்சல் போனில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை.

சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை தற்போது, கூகுள் பிக்சல் போன்களை புரொமோஷன் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த போன்கள் ரூ. 31 ஆயிரத்திலிருந்து ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை பையன் எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்த சுந்தர் பிச்சை; பிரியங்கா சோப்ரா ரியாக்ஷன் - அடுத்து நடந்தது? | Sundar Pichai Shared Chennai Man Pixel Phone Photo

இந்நிலையில் சென்னையை சேர்ந்த மதன் மோகன் ராம் என்ற புகைப்பட கலைஞர், தீபாவளியன்று கூகுள் பிக்சல் போனை பயன்படுத்தி புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படமானது அனைவரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது.

பிரியங்கா சோப்ரா ரியாக்ஷன்

அந்த புகைப்படத்தை சுந்தர் பிச்சை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மதன் மோகன் ராமிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகைப்படத்திற்கு பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா லைக் செய்துள்ளார்.

சென்னை பையன் எடுத்த ஃபோட்டோவை பகிர்ந்த சுந்தர் பிச்சை; பிரியங்கா சோப்ரா ரியாக்ஷன் - அடுத்து நடந்தது? | Sundar Pichai Shared Chennai Man Pixel Phone Photo

அவரது ரியாக்ஷன் அவரை பின்பற்றுபவர்களுக்கு ஹோம் பேஜில் நோடிபிகேஷனாக சென்றுள்ளது. உடனே பிரியங்கா சோப்ராவின் ஃபாலோவர்கள் பலரும் இந்த படத்திற்கு லைக் செய்துள்ளனர். இதனால் தற்போது அந்த புகைப்படம் வரலாகியுள்ளது.