வெடிக்கும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்; சுந்தர் பிச்சையின் அந்த ஒரு ஈமெயில் தான் - அவ்வளவு நிம்மதி!
சுந்தர் பிச்சையின் ஈமெயில் ஒன்று ஊழியர்களை நிம்மதி அடையவைத்துள்ளது.
ஊழியர்கள் பாதுகாப்பு
உலகின் முன்னணி டெக் நிறுவனங்கள் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் டெக் திறன்களையும், டெக் ஊழியர்களையும் பயன்படுத்திக்கொள்ள அங்கு அலுவலகங்களை திறந்துள்ளது.
இதில் இந்திய ஐடி சேவை நிறுவனங்களாக டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல் ஆகியவையும் அடங்கும். இந்நிலையில், ஹமாஸ் அமைப்பின் தாக்குத்தல் மூலம் இஸ்ரேல் பதில் தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில்
சுந்தர் பிச்சை ஈமெயில்
தற்போது பெரும் பொருளாதார பிரச்சனையாக மாறியுள்ளது. தொடர்ந்து, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அனைத்து ஊழியர்களுக்கும் இதுகுறித்து ஈமெயில் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், கூகுள் நிர்வாகம் இஸ்ரேல் நாட்டில் இருக்கும் கூகுள் ஊழியர்கள், இஸ்ரேல் நாட்டிற்கு பயணம் செய்யும் கூகுள் ஊழியர் என அனைவரையும் தொடர்பு கொண்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யுள்ளோம்.
மேலும் அவர்களுக்காக முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் இஸ்ரேல் நாட்டில் 2 அலுவலகத்தை Haifa, Tel Aviv பகுதியில் வைத்துள்ளது. இதில் சுமார் 2000 ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.