சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சுந்தர்.சி

Sundar C ADMK Madurai Tamil Nadu Election 2026
By Fathima Mar 28, 2026 06:54 AM GMT
Report

வேட்பாளராக சுந்தர்.சி

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் நடிகரும், இயக்குனருமான சுந்தர்.சி வேட்பாளராக களமிறங்குகிறார்.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தொகுதிகள் ஒதுக்கீடு, வேட்பாளர் அறிவிப்பு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம்பிடித்துள்ள புதிய நீதிக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது, இதில் ஒரு தொகுதியில் இரட்டை இலை சின்னத்திலும், மற்றொரு தொகுதியில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார் நடிகர் சுந்தர்.சி | Sundar C To Contest As Candidate In 2026

வெளியான அறிவிப்பு

மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் வேட்பாளராக நடிகரும் இயக்குநருமான சுந்தர்.சி போட்டியிடுவார் என புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார். 

மற்றொரு தொகுதி குறித்த அறிவிப்பு மார்ச் 30ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.