குஷ்பூ இல்லைனா அந்த நடிகையை காதலித்திருப்பேன் - மனம் திறந்த சுந்தர் சி
நடிகை மீது இருந்த க்ரஷ் குறித்து சுந்தர் சி பேசியுள்ளார்.
சுந்தர் சி
தலைநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் சுந்தர் சி. பல்வேறு படங்களில் நடித்துள்ளதோடு, சில படங்களையும் இயக்கி வந்துள்ளார்.
தற்போது கேங்கர்ஸ் என்னும் படத்தை இயக்கி வரும் இவர், அடுத்ததாக மூக்குத்தி அம்மன்-2 படத்தை இயக்க உள்ளார். இவர் 2000 ஆம் ஆண்டு பிரபல நடிகையாக இருந்த குஷ்பூவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
செளந்தர்யா
இந்நிலையில் ஒரு பேட்டி ஒன்றில் நடிகை ஒருவர் மீது தனக்கு இருந்த க்ரஷ் குறித்து சுந்தர் சி பேசியுள்ளார். இதில் பேசிய அவர், "நான் வொர்க் செய்ததில் எனக்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் அது செளந்தர்யாதான்.
குஷ்பூ என் வாழ்க்கையில் வராமல் இருந்திருந்தால் செளந்தர்யாவிற்கு ப்ரொபோஸ் செய்திருப்பேன். செளந்தர்யா ரொம்ப நல்ல கேரக்டர். அவங்களை போல நல்ல பெண்ணை பார்ப்பது மிகவும் அரிது. அவரது இறப்பு ரொம்ப துரதிர்ஷ்டமானது" என கூறினார்.