சுந்தர். சி சொத்து விபரங்கள்

Sundar C
By Fathima Apr 04, 2026 01:24 PM GMT
Report

புதிய நீதிக்கட்சி சார்பில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி.

இன்று அவர் வேட்புமனுவை தாக்கல் செய்த நிலையில், அவரது சொத்து மதிப்பு குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது.

அதில், சுந்தர்.சி பெயரில் 2.97 கோடி ரூபாயில் அசையும் சொத்துக்களும், மனைவி குஷ்பு பெயரில் 6.06 கோடி ரூபாயில் அசையும் சொத்துக்களும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுந்தர். சி சொத்து விபரங்கள் | Sundar C Net Worth In Nomination File

அசையா சொத்துக்களின் மதிப்பு 20.82 கோடி ரூபாயாகும், குஷ்புவிடம் 16.79 கோடி ரூபாய் அசையா சொத்துக்கள் உள்ளன.

சுந்தர்.சி பெயரில் 4.12 கோடி ரூபாய் கடனும், குஷ்பு பெயரில் 2.74 ரூபாய் கோடி கடனும் உள்ளது,

சுந்தர்.சியிடம் 3 காரும், குஷ்புவிடம் ஒரு காரும் உள்ளது. மேலும் குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுந்தர். சி சொத்து விபரங்கள் | Sundar C Net Worth In Nomination File