அவங்க...சரியான்ன டேமேஜ் ஹீரோயின் - மேடையில் மாளவிகாவை நோஸ் கட் செய்த சுந்தர்.சி...!
அவங்க... சரியான்ன டேமேஜ் ஹீரோயின் என்று பட விழா மேடையில் நடிகை மாளவிகா சர்மாவை கிண்டலாக நோஸ் கட் செய்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.
இயக்குநர் சுந்தர் சி.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் சுந்தர் சி. இவர் 2006-ம் ஆண்டு முதல் இயக்குநர் பணியிலிருந்து ‘தலை நகரம்’ படத்தின் மூலம் நடிகரானார்.
இதனையடுத்து, வீராப்பு, சண்டை, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம், முரட்டுக் காளை உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
குஷ்புவை திருமணம் செய்த சுந்தர்.சி
கடந்த 1995ம் ஆண்டு ‘முறை மாமன்’ என்ற படத்தை சுந்தர் சி இயக்கினார். இப்படத்தில் ஜெயராம், குஷ்பு, மனோரமா, கவுண்டமணி ஆகியோர் நடித்தனர். இப்படத்தில் நடித்தபோது குஷ்புவிற்கும், சுந்தர் சிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என இரு மகள்கள் உள்ளனர்.
‘காஃபி வித் காதல்’ படம்
சுந்தர் சி தற்போது இயக்கியிருக்கும் படம் ‘காஃபி வித் காதல்’. இப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், சம்யுக்தா, மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், சஞ்சிதா ஷெட்டி, டிடி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 7-ம் தேதி வெளியாக உள்ளது. இதனையடுத்து, இப்படத்தின் பிரம்மாண்டமான இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
நடிகை மாளவிகாவை நோஸ் கட் செய்த சுந்தர்.சி
இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, நடிகை மாளவிகா சர்மா குறித்து பேசினார்.
நடிகை மாளவிகா ஒரு டேமேஜ் ஹீரோயின். அவரை அப்படி சொல்வதற்கான காரணம் இருக்கு.
அது என்னவென்றால், ஆக்ஷன் படத்துல ஹீரோவுக்குதான் நிறைய அடிபடும். ஆனா ஒரு ரொமாண்டிக் படத்துல அதிகம் அடிபட்ட நடிகைனா அது மாளவிகா சர்மா தான். படத்துல நிறைய சீன் அவங்க இல்லாம எடுக்க வேண்டியதா போச்சு.
ஒரு நாள் வருவாங்க சார் கண்ணுல அடிபட்டிடுச்சுனு சொல்லி லீவ் போடுவாங்க. அது சரியாகி வந்தப்போ, மேக் அப் மேல், தலைக்கு போடுற ட்ரிரையர கைக்கு போட்டுவிட்டுட்டான். அதனால் கையெல்லாம் வீங்கிடுச்சு என்று சொல்வாங்க. அதுமாதிரி ஒரு சாங் ஷூட் பண்ணப்போ, முட்டி வீங்கிடுச்சு என்று சொன்னாங்க.
இப்படி படம் முழுக்க ஒரு டேமேஜ் ஹீரோயினா தான் அவங்க இருந்தாங்க. அவுங்க வக்கீல்னு வேற சொல்றாங்க. பயங்கரமா சட்டம் பேசுவாங்கன்னு பார்த்தா, ரொம்ப அப்ராணியாதான் இருந்தாங்க என்றார்.