சூரியனின் இழையிலிருந்து வெளிப்படும் வெடிப்பு - வைரலாகும் வீடியோ

Viral Video NASA
By Nandhini Aug 15, 2022 03:56 PM GMT
Report

பிரபஞ்சத்தின் சத்தின் அழகிய புகைப்படங்கள் 

சமீபத்தில் பூமியில் இருந்து 8 ஆயிரத்து 500 ஓளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கரீனா நிபுலா பிரபஞ்சம், 1,150 ஒளி ஆண்டுகள் தொலைவில் ஸ்பெக்டர்ம் பிரபஞ்சம், 2 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சதர்ன் ரிங் நிபுலா பிரபஞ்சம், 290 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஸ்டீபன்ஸ் குவாண்ட் எனப்படும் 5 விண்மீன்களின் தொகுப்பு ஆகிய பிரபஞ்சத்தின் புகைப்படங்களை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமிக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. 

nasa

சூரியனின் இழையின் வெடிப்பு 

இந்நிலையில்,  தொழில்துறை பொறியாளர் ஐரீன் குயிரோஸ் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், சூரியனின் வடமேற்குப் பகுதியில் இழையின் வெடிப்பு காணப்படுகிறது. அதில் வளைந்த புலங்கள் காணப்படுகின்றன. இந்த அற்புதமான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

sun