தலைவரு நிரந்தரம்...விக்ரம், PS-1 ஓரங்கட்டிய ஜெயிலர் - அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர்ஸ்
ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் படத்தின் ஒரு வார அதிகாரபூர்வ வசூலை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
ரஜினி ஜெயிலர்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் "ஜெயிலர்". ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படம் வெளியான முதல் வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் படம் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. தர்பார், அண்ணாத்தே போன்ற படங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையிலும், சூப்பர்ஸ்டார் பட்டம் குறித்து விவாதங்கள் பல்வேறு தரப்பில் எழுப்பப்பட்ட நிலையிலும், தற்போது ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றி ரஜினி மட்டுமின்று அவரது ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வெற்றி விழா
இன்று சென்னையில், இப்படத்தின் சக்ஸஸ் பார்ட்டி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் படத்தின் இயக்குனர் நெல்சன், நடிகர்கள் வசந்த ரவி, நடிகை மிர்னா மேனன் போன்றோரும் பங்கேற்றுள்ளனர். படம் வெளியான ஒரே வாரத்தில் 400 கோடி வசூலை தாண்டியது என பலதரப்பட்ட கருத்துக்களும் சமூகவலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தில் அதிகாரபூர்வ வசூலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, படம் வெளியான ஒரு வார காலத்தில், இது வரை தமிழ் சினிமாவில் எந்த ஒரு படமும் நிகழ்த்திடாத வசூலாக மொத்தமாக 375. 40 கோடி ரூபாயை ஜெயிலர் படம் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.