சூரியனின் மேற்பரப்பு இப்படி தான் இருக்குமா? - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

viral sun picture andrew mccarthy telescope
By Swetha Subash Dec 07, 2021 08:05 AM GMT
Swetha Subash

Swetha Subash

in உலகம்
Report

பூமியின் அண்ட சராசரத்தையும் கட்டி ஆளும் இயற்கையின் அரசன், அக்னி குழம்புகளால் சூழப்பட்ட மிகப்பெரிய விண்மீண் சூரியன்.

சூரியனின் மேற்பரப்பு எப்போதுமே கொளுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும்.

நிலா, செவ்வாய்க்கு செல்லும் விஞ்ஞானிகளால் கூட சூரியனை நெருங்க முடியவில்லை அவ்வளவு ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்தும் கூட சூரியனை நம் கண்களால் சில நொடிகள் கூட பார்க்க இயலாது.

ஆனால் அதிநவீன தொலைநோக்கி (Telescope)மூலம் அதன் மேற்பரப்பை பார்க்க முடியும்.

அவ்வாறு பார்த்து வித்தியாசமான முறையில் சூரியனை படம் பிடித்து அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுள்ளார் வானியல் புகைப்படக் கலைஞர் ஆண்ட்ரூ மெக்கார்த்தி.

சூரியனின் பல்வேறு பகுதிகளை தனித்தனியாக 1 லட்சத்து 50 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்து அவையனைத்தையும் ஒன்றிணைத்து சூரியனின் முழு புகைப்படத்தையும் வடிவமைத்திருக்கிறார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்த மெக்கார்த்தி, இந்தப் புகைப்படம் உலகத்திற்கும் தனக்கும் மிகவும் ஸ்பெஷலான புகைப்படம் என்றும், சூரியனை ஒவ்வொரு முறை படம் பிடிக்கும் போதும் உற்சாகமாக உணர்வதாகவும் கூறுகிறார்.

இயல்பாகவே சூரியனின் மேற்பரப்பை படம்பிடிக்க இரண்டு தொலைநோக்கி ஃபில்டர்கள் தேவைப்படுகின்றன.

ஒன்று படம்பிடிப்பவரின் கண்களை சூரியனிடமிருந்து காப்பாற்றவும் மற்றொன்று தொலைநோக்கி எரிவதிலிருந்து காப்பாற்றவும் உதவுகிறது.

ஏனென்றால் கேமராவை நோக்கி சூரியன் அதிகப்படியான ஒளியை வெளிப்படுத்தும். ஆனால் மெக்கார்த்தியோ அதிக உருப்பெருக்கத்தை உருவாக்குவதற்காக மாற்றியமைக்கப்பட்ட தொலைநோக்கியை (Modified Telescope) பயன்படுத்தியதாகக் கூறுகிறார்.

இவருக்கு முன்பாகவே பலர் சூரியனின் மேற்பரப்பு இப்படி தான் இருக்கும் என புகைப்படங்களை வெளியிட்டிருந்தாலும் அவையெல்லாம் சாப்ட்வேரால் வடிவமைக்கப்பட்டவை எனக்கூறி போலியானது என முத்திரை குத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.