குரு- சூரியன் உருவாக்கும் நவபஞ்சம ராஜயோகம்
கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுதும் என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது. அந்தவகையில் முக்கிய கிரங்களின் சேர்க்கையால் உருவாகும் ராஜயோகங்களுக்கு சாஸ்திரங்களில் முக்கிய இடம் கொடுக்கப்படுகின்து.
அப்படி வேத நாட்காட்டியின் அடிப்படையில் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் ஹோலி பண்டிகைகயின் பின் சூரியன் மற்றும் குரு பகவானால் மிகவும் சக்தி வாய்ந்த நவபஞ்சம ராஜயோகம் உருவாகவுள்ளது.

குறித்த ராஜ யோகத்தின் தாக்கமானது 12 ராசிகளிலும் சில சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தினாலும், இந்த அரிய ராஜ யோகத்தின் முழுமையாக அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க காத்திருக்கும் டாப் 3 ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு குரு சூரியனால் உருவாகும் குறித்த நவபஞ்சம ராஜயோகத்தால் வாழ்வில் முக்கியமான திருப்பங்கள் நிகழப்போகின்றது. எதிர்காலத்தில் நன்மை பயக்கும் முடிவுகளை எடுப்பீர்க்ள.
சூரியனின் ஆசியால் உயர் பதவிகளில் அமரும் வாய்ப்பு கூடி வரும். குரு பகவானின் ஆசியால் செல்வ செழிப்பு அதிகரிக்கும்.
வியாபாரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத வகையில் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
சிம்மம்

குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகத்தால், சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசியினர் பொருளாதார ரீதியில் உச்ச வளர்ச்சியை பெறப்போகின்றார்கள்.
இவர்களின் நீணட கால உழைப்புக்கு தகுந்த பலன் கிடைக்கப்போகின்றது. ஆளுமை மேம்படும். புதிய திறன்களை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
புதிய வேலைவாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டில் பணிபுரியும் யோகம் அமையும். பணியிடத்தில் உங்களின் ஆதிக்கம் அதிகரிக்கும்.
மீனம்

மீன ராசியினர் வாழ்வில் குரு சூரியனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகமானது எதிர்ப்பார்ப்பை விட நல்ல பலன்களை கொடுக்கும். சூரியனின் நிலையால் உயர் பதிவி தேடிவரும்.
புதிய தொழில் ஆரம்பிக்கும் வாய்ப்புகள் உருவாகும் குருவின் ஆசியால் நிதி நிலையில் பாரிய மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
தொழில் புரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது பரம்பரை சொத்துக்களால் லாபம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் காணப்படுகின்றது.