1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - என்ன தெரியுமா?
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் வகுப்புகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்தது. இதனிடையே தொற்று குறைந்ததால் கடந்த ஜனவரி மாதம் முதல் அனைவருக்கும் வழக்கம்போல பள்ளிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது ஆண்டு இறுதி தேர்வுகள் தொடங்கிவுள்ள நிலையில் அக்னி நட்சத்திரம் காரணமாக வெயில் தாக்கம் அதிகரித்ததால் மாணவர்கள் நலனில் அக்கறை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து மே 5 ஆம் தேதி முதல் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும், தேர்வு நாளில் வருகை தர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார்.
இந்நிலையில் 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 23 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.