கோடை காலங்களில் தவறியும் இஞ்சி பூண்டு வெங்காயம் சாப்பிடக்கூடாதாம்

Mango Ginger Onion Summer Season
By Sakthi Raj May 06, 2026 07:36 AM GMT
Report

தமிழகத்தில் ஏப்ரல், மே மாதம் நிலவும் கடும் வெயில் நிலவும். அந்த வகையில் கத்திரி வெயில் தொடங்காத நேரத்திலும் பல்வேறு இடங்களில் வெயில் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் பலரும் கடுமையான உடல் சோர்விற்கு ஆளாகக்கூடும்.

அதனால் இந்த நேரங்களில் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்ளவது அவசியம். அப்படியாக, வெயில் காலங்களில் எந்த உணவுகள் எடுக்கலாம்? எடுக்கக்கூடாது என்று பார்ப்போம்.

சாப்பிட வேண்டிய உணவுகள்:

1. வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருப்பதால் இந்த காலகட்டங்களில் உடல் அதிகம் உஷ்ணமாக வாய்ப்பு இருக்கிறது. அதனால் தினமும் நாம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதை போல் தனிப்பழம், மற்றும் சாத்துக்குடி ஆகிய பானங்களை குடிப்பதும் நம்முடைய உடல் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.

2. இந்த வெயில் காலங்களில் கேரட், முள்ளங்கி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை நாம் சாப்பிடுவது நம் உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் நம்முடைய செரிமானத்திற்கும் உதவியாக அமைகிறது. குறிப்பாக கேரட், முள்ளங்கி போன்ற காய்கறிகள் குளிர்கால வகைகளாகும்.

கோடை காலங்களில் தவறியும் இஞ்சி பூண்டு வெங்காயம் சாப்பிடக்கூடாதாம் | Summer Diet Food For Healthy Life Style

வெயில் காலங்களில் அதிக நேரம் ஏசியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குதான்

வெயில் காலங்களில் அதிக நேரம் ஏசியில் இருப்பவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்குதான்

அதேபோல் தனிப்பழம், கிர்ணிப்பழம், திராட்சை, நுங்கு சாப்பிடுவது நம்முடைய உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. ஆனால் வெயில் காலங்களில் மாம்பழ சீசன் என்றாலும் மாம்பழம் எடுத்துக்கொள்ளும் பொழுது உடல் வெப்பத்தை அதிகரிக்கிறது. இதனால் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

3. வெயில் காலங்களில் காலை உணவாக பழைய சாதம் சாப்பிடுவது நம்முடைய உடலை மிகவும் குளிர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

1. இந்த வெயில் காலங்களில் முடிந்த வரை காரமிக்க உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை செரிமான பிரச்சனைகளை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது.

2. கோடை காலங்களில் பாலக்கீரை போன்ற கீரை வகைகளை எடுத்துக் கொள்ளும் பொழுது செரிமான அமைப்புகள் சீராக வேலை செய்கிறது.

கோடை காலங்களில் தவறியும் இஞ்சி பூண்டு வெங்காயம் சாப்பிடக்கூடாதாம் | Summer Diet Food For Healthy Life Style

3. வெங்காயம் எடுத்துக் கொள்ளும் பொழுது அதில் இருக்கக்கூடிய கந்தகம்  நம்முடைய உடலில் அதிக வெப்பத்தை உருவாக்கூடும். எனவே வயிறு உப்புதல், வாயு பிரச்சனை நெஞ்சு எரிச்சல் போன்றவை உருவாகலாம். அதை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

4. அதேபோல், இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றில் அதிக மருத்துவ குணங்கள் இருந்தாலும் இதை இயற்கையாகவே அதிக அளவில் வெப்பத்தை அதிகரிக்க கூடியது. இஞ்சி பூண்டில் இருக்கக்கூடிய அலிசின் போன்ற சேர்மங்கள் ரத்த ஓட்டத்தை தூண்டும். இதனால் வளர்சிதை மாற்ற வெப்பத்தை அதிகரிக்க செய்துவிடும். அதனால் அதை தவிர்ப்பது நல்லது.