இயல்பை விட அதிகரிக்கும் வெயில்!

Tamil nadu
By Fathima Apr 11, 2026 11:22 AM GMT
Report

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 15 வரை வெயில் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

ஒடிசாவின் உட்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை தெற்கு சத்தீஸ்கர், உள் கர்நாடகம் மற்றும் உள்தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

இதனால் கன்னியாகுமரி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஏப்ரல் 17 வரை லேசான மழை இருந்தாலும் தமிழகம் புதுவையில் வறண்ட நிலை நிலவக்கூடும்.

 ஏப்ரல் 14 வரை வழக்கத்தை விட அதிகமான வெயில் இருக்கும், படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இயல்பை விட அதிகரிக்கும் வெயில்! | Summer Climate Warning Tamilnadu