தள்ளிப்போகும் சுல்தான் படத்தின் ரிலீஸ் தேதி: காரணம் என்ன?
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாவது உறுதி செய்யப்பட்டு.
அதன் ரிலீஸ் தேதி தற்போது தள்ளிபோகியுள்ளது. கொரோனாவால் தியேட்டர்கள் பல மாதங்களாக மூடப்பட்டு தற்போது மீண்டும் திறக்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் தியேட்டர்களில் கூட்டம் குறைவாக இருப்பதால் காலை, பகல் காட்சிகளை ரத்து செய்து வருகிறார்கள். சில தியேட்டர்களை மூடியும் வைத்துள்ளனர்.
சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதி நடித்த க.பெ. ரணசிங்கம், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன், ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின், வரலட்சுமியின் டேனி உள்ளிட்ட படங்கள் தியேட்டருக்கு பதிலாக ஓ.டி.டி.யில் வந்தன.
ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம் பொங்கலுக்கு ஓ.டி.டி.யில் வெளியாகிறது. தற்போது கார்த்தி அவர்கள் நடித்த சுல்தான் படத்தையும் ஓ.டி.டி ரிலீசுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
இதற்கு காரணமாக மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்களுக்கு முற்றிலுமாக தியேட்டர் ஒதுக்கப்பட்டது என கூறப்பட்டு வருகிறது.
இதனை முற்றிலுமாக மறுத்த சுல்தான் படக்குழுவினர் படத்தின் ரிலீசை ஏப்ரல் மாதத்துக்கு தள்ளி வைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.