2024 Sukra: சுக்ரனின் இடமாற்றம் - அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் இவைதான்!

Astrology
By Sumathi Dec 20, 2023 12:13 PM GMT
Report

சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம் பெற போகும் ராசிகள் குறித்து இங்கே காணலாம்.

சுக்கிரன் 

சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். அந்த சமயங்களில் ஒருவரது நிதி நிலை, காதல், மகிழ்ச்சி ஆகியவற்றில் தாக்கம் ஏற்படும் சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.

sukra 2024

தற்போது சொந்த ராசியான துலாம் ராசியில் பயணித்து வரும் சுக்கிரன் டிசம்பர் 25 ஆம் தேதி செவ்வாய் ஆளும் விருச்சிக ராசிக்கு செல்கிறார். அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

rasi palan 2024

ரிஷபம்

ரிஷப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டுத் தொழில் செய்ய விரும்பினால், இக்காலத்தில் செய்தால், நல்ல பலனைப் பெறலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்டும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு மேம்படும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். நிலம் மற்றும் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் எதிர்பாராத நேரத்தில் பணவரவு இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெற வைக்கும்.

துலாம்

துலாம் ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆளுமை மேம்படும். ஆராய்ச்சி துறையில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். எதிர்பாராத நேரத்தில் வெற்றி மற்றும் பண வரவு இருக்கும். சுக்கிரன் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், காதல், மகிழ்ச்சி ஆகியவற்றின் காரணியாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.