சுக்கு மல்லி காஃபி பொடி தயாரிப்பது எப்படி? மழைக்காலத்தில் ரொம்ப உதவியா இருக்கும்!
கோடை, குளிர், மழை என்ற மூன்று பருவநிலைகளை கொண்ட இந்தியாவில் ஒவ்வொரு பருவநிலைகளிலும் சில தொற்று நோய் தாக்கம் இருந்து வருகிறது. இதில் முக்கியமாக பார்க்கப்படுவது சளித்தொல்லை, இருமல், தலைவலி, காய்ச்சல். மூன்று பருவ நிலைகளிலும் இந்த தொற்று பொதுவாக பலரையும் பாதித்து வருகிறது. இதற்காக மருத்தவரிடம் செல்வது, மாத்திரைகள் சாப்பிடுவது என பலரும் ஆங்கில மருத்துவத்தை பயன்படுத்துவது தற்போதைய காலகட்டத்தில் அதிகமாக உள்ளது.ஆனால் பழங்கால மருத்துவ முறைகளை பெரும்பாலானோர் பயன்படுத்தில்லை.
இதனால் பல இயற்கை மருத்துவ தவாரங்கள் அழிந்துவிட்டது என்றே கூறலாம். ஆனால் தற்போது உலகநாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமாக அதிகரித்து வருகிறது. இதில் தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுளின் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தற்போது ஆங்கில மருந்துகளை விட இயற்கை மருத்தவத்தையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.அந்த வகையில் இயற்கை மருத்துவத்தில் நமக்கு பல நன்மைகளை கொடுக்கும் பொருட்களில் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றுக்கும் தனி இடம் உண்டு. இதில் மழைக்காலங்களில் ஏற்படும் சளி, இருமல், தலைவலி மற்றும் வறட்டு இருமல் ஆகிய தொற்றுகளுக்கு உடனடி நிவாணம் அளிக்கப்கூடியது சுக்குமல்லி பொடி. இயற்கை மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வரும் இந்த பொடியை தயாரிப்பது மிகவும் எளிது. அதனை எப்படி தயார் செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
சுக்கு – 15 கிராம் (தேவைக்கேற்ப)
மல்லி – 2 ஸ்பூன்
மிளகு – 1 ஸ்பூன்
ஏலக்காய் – 3
செய்முறை :
முதலில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பொருட்களையும் தனித்தனியாக வறுத்து எடுத்து ஆறவைக்கவும். அவை அனைத்தும் நன்றாக ஆறியவுடன் ஒன்றாக மிக்ஸியில் போட்டு அறைத்து எடுத்தால் சுக்கு மல்லிப்பொடி தயார். தற்போது கொடுத்துள்ள அளவு ஒரு நபர் 10 நாள் பயன்படுத்தும் அளவுக்கு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. வீட்டில் அதிமான நபர்கள் பயன்படுத்தும்போது தேவைற்கேற்ப அனைத்து பொருட்களையும் சேர்த்து அறைத்துக்கொள்ளலாம்.
இந்த சுக்குமல்லி பொடியை மூன்று வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்தலாம். பால் அல்லது கொதிக்கவைத்த தண்ணீரில் நாட்டுச்சக்கரையுடன் கலந்து குடிக்கலாம். மழைகாலத்தில் ஏற்படும் நளி இருமல், காய்ச்சல், வறட்டு இருமல், ஆகியவற்றை குணப்படுத்தும் சக்தி உள்ளது.