சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற 81 சிறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு - வெளியான பட்டியல் - பரபரப்பு சம்பவம்

By Nandhini Jul 12, 2022 11:15 AM GMT
Report

சுகேஷ் சந்திரசேகர்

ரூ.200 கோடி மோசடி, இரட்டை இலை சின்னத்தை மீட்க இடைத்தரகராக செயல்பட்டு, பல மோசடிகளை செய்தவர்தான் இந்த சந்திரசேகர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுகவினரும், டிடிவி தினகரனும் போட்டா போட்டி போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே இடைத்தரகராக செயல்பட்டு சின்னத்தை மீட்க, டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். 2017ம் ஆண்டு டெல்லி குற்றப்பிரிவு போலீசாரால் கைதான சந்திரசேகர், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது, 21க்கும் அதிகமான மோசடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

20 சொகுசு கார்கள், லேப்டாப், பணம் பறிமுதல்

சிறையில் இருந்தபடியே, பிரபல தொழிலதிபர் ஷிவிந்தர் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் ரூ.200 கோடி பெற்று மோசடியில் ஈடுபட்டார். சிறையில் இருக்கும் தனது கணவரை ஜாமீனில் எடுக்க உதவுவதாக கூறி, பணம் பெற்றதாக அதிதியே புகார் அளித்தார். இதனையடுத்து சுகேஷுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள். அதில் 20 சொகுசு கார்கள், லேப்டாப், பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. சிறையில் இருந்து கொண்டு, அவரது மனைவியும், நடிகையுமான லீனா மரியா மூலம் மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, அவரும் கைது செய்யப்பட்டார்.

80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு

இந்நிலையில் சிறையில் உள்ள 80க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். 80 அதிகாரிகள், சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் வாங்கியதாக போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். சிறை அதிகாரிகள் அவரிடம் லஞ்சம் வாங்கி கொண்டு சந்திரசேகருக்கு மொபைல் போன்கள், ஒரு தனி அறை மற்றும் பிற சொகுசு வசதிகளை வழங்கி இருக்கின்றனர்.

மொத்தம் 81 அதிகாரிகள் ரூ.12 கோடி லஞ்சம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் ஏற்கனவே 8 சிறை ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறை அதிகாரிகளுக்கு, மாதந்தோறும், ரூ.1.5 கோடி ரூபாய் லஞ்சமாக, கொடுத்தது தெரியவந்திருக்கிறது.   

நான் இருக்கும் வரை அ.தி.மு.க.வை அபகரிக்கவோ, அழிக்கவோ முடியாது : கொந்தளித்த சசிகலா