தேடி வரும் ரூ.74 லட்சம்; பெண் குழந்தை இருக்காங்களா? அப்போ அரசின் இந்த திட்டம் உதவும்!
பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு பயனளிக்கும் வகையில் அரசு இத்திட்டம் தொடங்கியது.
பெண் குழந்தை
ஒவ்வொரு குடும்பத்திலும் பெண் குழந்தை பிறந்தால் நகை பணம் என பெற்றோர்கள் அவர்களுக்காக சேமிக்க தொடங்குவார்கள். தற்போது அதை இன்னும் சுலபமாக்க அரசும் பல்வேறு திட்டத்தை தொடங்கியுள்ளது. அதில் பலதரப்பு மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் பெண் குழந்தைகளுக்கான சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பெற்றோர் தங்கள் மகளின் கல்வி அல்லது திருமணத்திற்காக பணத்தை சேமிக்கலாம். மகளின் பெயரில் கணக்கு தொடங்கப்படும்.
அரசின் திட்டம்
நிதியுதவி வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தைகள் எதிர்காலத்தில் நிதி நெருக்கடியை சந்திக்காமல் தடுக்க இத்திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்சம் 250 ரூபாய் மட்டுமே ஆகும்.
இதன் வட்டி விகிதம் 8.2 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு 7.6 சதவீதமாக இருந்ததை அரசு அதை 8.2 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பெண் 18 வயது நிரம்பியவுடன் டெபாசிட் செய்யப்பட்ட பிரீமியத்தில் 50% திரும்பப் பெறலாம். இந்தக் கணக்கை இந்தியாவில் உள்ள எந்த வங்கிக் கிளைக்கும் மாற்றலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் கணக்கு ஆரம்பிக்க மகளின் 10 வயதுக்குள் கணக்கு தொடங்கப்பட வேண்டும்.ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் இரண்டு பெண் குழந்தைகளின் பெயரில் இத்திட்டத்தின் கீழ் தொடங்கலாம்.ஒருவேளை இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தால், அவர்களைத் தவிர மேலும் ஒரு பெண் குழந்தையும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
பெற்றோரின் ஆதார் அட்டை, மகளின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் பான் அட்டை, வருமானச் சான்றிதழ் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்,
மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கிக் கணக்கு எண் அகியவை ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை
முதலில் பெண்ணின் பெயரில் வங்கிக் கணக்கைத் திறக்கவும். சுகன்யா சம்ரித்தி யோஜனாவின் விண்ணப்பப் படிவங்கள் வங்கியிலேயே கிடைக்கும். அதை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பப் படிவத்துடன் குறைந்தபட்ச பிரீமியம் 250 ரூபாய் மற்றும் அதிகபட்சம் 1 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட வேண்டும். வங்கியின் அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவத்தைப் பார்க்கவும். எல்லாம் சரியாக இருந்தால், விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்து, ரசீது பெற்றுக்கொள்ளவும். அந்த ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும்.