ஒரே ஒரு சூட்கேசில் தான் முதல்வர் காமராஜரின் உடைமைகள் இருந்தது: ராகுல் புகழாரம்

party dmk congress National
By Jon Mar 03, 2021 02:35 PM GMT
Report

''தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் உடைமைகள் வெறும் ஒரு சூட்கேசில் அடங்கியதை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன் என்று ராகுல்காந்தி புகழாரம் சூட்டி பேசினார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட போது அவர் பேசியதாவது: வரும் சட்டசபை தேர்தல் மிகவும் சவாலாக இருக்கும்.

மத்தியில் ஆளும் மோடி அரசு தமிழ் மொழி, தமிழக கலாசாரத்தையும் ஒடுக்கி விடலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறது. தமிழக மக்கள் தான் தமிழகத்தின் தலையெழுத்தை தீர்மானிப்பார்கள். தமிழகத்துக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத முதல்வர் கண்டிப்பாக வேண்டும். தமிழகத்தின் முக்கிய விஷயம் வேலை வாய்ப்புதான்.

பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., பலரது வேலைவாய்ப்பை கெடுத்திருக்கிறது. புதிய விவசாய சட்டம் விவசாயிகள் வாழ்வை ஒழிக்கும் வகையில் உள்ளது. வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய விவசாயம், சிறு தொழில்களை பாதுகாக்கும் ஒரு அரசாங்கம் வேண்டும். தமிழகத்துக்கு போராடும் ஒரு முதல்வரும், பா.ஜ.,வின் சுரண்டலில் இருந்து மக்களை காப்பாற்றும் அரசும் வேண்டும்.

எல்லா மதமும் ஒன்றுதான் என்ற கொள்கைதான் தமிழகத்தை வலுப்படுத்தியுள்ளது. இதை பிளவுப்படுத்த அனுமதிக்க மாட்டோம். குமரி மாவட்ட மக்களுக்கும் எங்களுக்கும் ஒரு நல்ல குடும்ப உறவு இருந்து கொண்டுள்ளது.

ஒரே ஒரு சூட்கேசில் தான் முதல்வர் காமராஜரின் உடைமைகள் இருந்தது: ராகுல் புகழாரம் | Suitcase Contained Chief Minister Kamaraj Rahul

''தமிழக முதல்வராக இருந்த காமராஜரின் உடைமைகள் வெறும் ஒரு சூட்கேசில் அடங்கியதை படித்து நான் மிகவும் நெகிழ்ந்து போயுள்ளேன். என் பாட்டி, தந்தை ராஜீவ் காலம் முதல் என்காலம் வரை குமரி மக்கள் அன்பை பொழிய உள்ளார்கள். இதற்கு நான் எப்போதும் கடமைபட்டுள்ளேன்'' என்றார்.