ரயில் முன்பு பாய்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் தற்கொலை - சோகச் சம்பவம்

police suicide
By Nandhini Dec 26, 2021 07:19 AM GMT
Report

விருதுநகரில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக ராதாகிருஷ்ணன் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி பானுமதி (45). இவர் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை, ராதாகிருஷ்ணன் வழக்கம்போல பணிக்குச் சென்ற நிலையில், நேற்று இரவு 10 மணியளவில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே தண்வாள பகுதியில் நெல்லையிலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தண்டவாளத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நபரின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டை ஆவணங்களை பார்த்து விசாரணை செய்த போது, தற்கொலை செய்து கொண்டது சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.