பலி வாங்கும் ஆவிகள் - இறந்த காதலர்களின் சிலைக்கு திருமணம் செய்த வினோதம்!
இறந்த பிறகு காதலர்களின் சிலைகளுக்கு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது.
தற்கொலை
குஜராத் மாநிலம் டாப்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கணேஷ் (25). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஞ்சனா (22) என்ற பெண்ணும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். அதன் பிறகு, இருவரும் தங்களின் காதல் விவகாரம் குறித்து வீட்டில் கூறியுள்ளனர்.

ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பகையை காரணம் காட்டி காதலுக்கு உறவினர்கள் மறுப்பு கூறியுள்ளனர். மேலும், தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்து கொண்டால் கொலை செய்துவிடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் ஒரு மரத்தில் ஒன்றாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
ஆவி தொல்லை
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், காதல் தோல்வியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இந்நிலையில், கணேஷ், ராஞ்சனா வீட்டில் அடுத்தடுத்து மரணங்கள் நிகழ்ந்தன. பெரும் தொழில் நஷ்டமும் ஏற்பட்டது. மேலும், அவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆவிகள் தொந்தரவு செய்வதாக கூறியுள்ளனர்.
அப்போது அனைத்து ஜோதிடர்களும், தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடிகள் நிராசையால் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களை சிலைகளாக வடித்து திருமணம் செய்து வைத்து விடுமாறும் கூறியுள்ளனர்.
அதன்படியே, இரு வீட்டாரும் சேர்ந்து உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து, கணேஷ் - ராஞ்சனா ஜோடிகளின் கல் சிலைகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.