பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு - 9 போலீசார் பலி... - 13 பேர் காயம்..!
தென்மேற்கு பாகிஸ்தானில் இன்று போலீஸ் டிரக் மீது தன் பைக்கை மோதி தற்கொலை படையினர் நடத்திய குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானில் தற்கொலை குண்டுவெடிப்பு
பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிலிருந்து கிழக்கே 160 கிமீ தொலைவில் உள்ள சிப்பி நகரில் தற்கொலைப் படை குண்டு வெடிப்பு சம்பவம் நடத்தியுள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில்,
காவல்துறையினரை ஏற்றிக்கொண்டு சென்ற வேன் சிபியிலிருந்து குவெட்டாவுக்குத் திரும்பிக் கொண்டிருந்ததது. அந்த வேன் சிபி மற்றும் கச்சி மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தவர் திடீரென போலீஸ் வேன் மீது மோதினார். அப்போது பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கர சத்தத்துடன் நடந்தது.
இந்த தற்கொலைப்படை குண்டுவெடிப்பு சம்பவத்தில் 9 பாகிஸ்தான் போலீசார் உயிரிழந்தனர். 13 பாகிஸ்தான் போலீசார் பலத்த காயமடைந்தனர்.
பாகிஸ்தானில் காவல்துறை அதிகாரிகளை குறிவைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றனர்.
இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தற்போது இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

9 Policemen Killed In Suicide Bombing In Southwest Pakistan https://t.co/weIF219Wh0 pic.twitter.com/0Inktrgg1c
— SingleBuchi (@singlebuchi) March 6, 2023