ஆப்கானிஸ்தானில் ரஷ்ய துாதரகம் முன் தற்கொலைப்படை தாக்குதல் - 20 பேர் பலி

Afghanistan Taliban
By Thahir Sep 05, 2022 09:22 AM GMT
Report

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய துாதரகம் அருகே நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.

தற்கொலை படைத்தாக்குதல்

ஆப்கானிஸ்தான் காபூலில் ரஷ்ய துாதரகத்தின் வெளியே இன்று மக்கள் விசாவுக்காக காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ரஷ்ய துாதரகத்திற்கு நுழைவாயில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய மர்ம நபரை போலீசார் சுட்டுக் கொன்றதாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.

Afghanistan Blast

இந்த விபத்தில் ரஷ்ய துாதரக அதிகாரிகள் 2 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை மசூதியில் தொழுகையின் போது தாக்குதல் நடத்தப்பட்டதில் 18 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் அங்கு குண்டு வெடிப்பு சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.