தற்கொலையில் முன்னேறும் தமிழகம் - அதிர்ச்சி அறிக்கையின் தகவல் இதோ..!

Tamil nadu India Death
By Sumathi Aug 31, 2022 10:15 AM GMT
Report

இந்நியாவில் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை பட்டியலில் தமிழகம் 2வது இடம்.

தற்கொலைகள்

நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 33 தற்கொலைகள் நடந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 7 புள்ளி 2 சதவீதம் அதிகம் ஆகும்.

தற்கொலையில் முன்னேறும் தமிழகம் - அதிர்ச்சி அறிக்கையின் தகவல் இதோ..! | Suicidal Grief Tamil Nadu Is Second

இதில் 22 ஆயிரத்து 207 தற்கொலைகள் நடந்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் நாட்டிலேயே முதலிடத்திலும், 18 ஆயிரத்து 925 தற்கொலைகளுடன் தமிழ்நாடு இரண்டாமிடத்திலும் உள்ளது. 14 ஆயிரத்து 965 தற்கொலைகளுடன் மத்தியப் பிரதேசம் மூன்றாமிடத்திலும் உள்ளது.

தமிழகம் 2வது.. 

தற்கொலை செய்துகொண்டவர்களில் மாணவிகள்(5,693 பேர்) மற்றும் தினசரி ஊதியம் பெறும் பணியாளர்கள்(4,246 பேர்). அதிலும், பெரும்பாலான இல்லத்தரசிகள் தற்கொலைகள் தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது(3,221 பேர்) என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

தற்கொலையில் முன்னேறும் தமிழகம் - அதிர்ச்சி அறிக்கையின் தகவல் இதோ..! | Suicidal Grief Tamil Nadu Is Second

பெரும்பாலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தற்கொலை செய்துகொள்ள காரணம் - திருமணம் தொடர்பான பிரச்சினைகள் (குறிப்பாக வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள்) மற்றும் கருவுறுதல் பிரச்சினை மற்றும் கர்ப்பம் தரிக்காமல் இருத்தல் ஆகியவற்றின் காரணமாகவே அதிகமான பெண்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

 அதிகமான பெண்கள்

மொத்த தற்கொலைகளில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா ஆகிய ஐந்து மாநிலங்களில் மட்டும் 50 புள்ளி 4 சதவீத தற்கொலைகள் நடைபெற்றுள்ளன. பணிச் சுமை, தனிமை உணர்வு, குடும்ப பிரச்சனைகள்,

மனநல பாதிப்பு, வறுமை, போதைக்கு அடிமையாதல் போன்றவையே தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது