கமல்ஹாசன் செய்த காரியத்தால் கதறி அழுத மனோபாலா - ரகசியம் உடைத்த நடிகை!
நடிகர் கமல்ஹாசனுக்கும் மனோபாலாவுக்கும் இடையில் இருந்த பிரச்சனை குறித்து நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார்.
மரணமடைந்த மனோபாலா
நடிகர் மனோபாலா தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த கலைஞர், சமீபத்தில் அவர் மரணம் அடைந்தது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் ஒரு இயக்குனராக அறிமுகமாகி பிறகு தயாரிப்பாளராக மாறி அதைத்தொடர்ந்து நடிகராகவும் பலருக்கும் பரிச்சயமாக மாறி இருந்தார்.
மேலும், இவர் இயக்குனராக இருந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் வீட்டில் தான் தங்கி இருந்தார்.
அவருடைய வீட்டில் பல மாதங்கள் இருந்ததாகவும் கமல்ஹாசனுடைய மனைவிதான் தனக்கு சாப்பாடு கொடுத்ததாகவும் பேட்டி ஒன்றில் மனோபாலா கூறி இருந்தார்.
நடிகை பேட்டி
இந்நிலையில், அவர் வருத்தப்பட்ட ஒரு நிகழ்வு பற்றி சுஹாசினி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
அதில் "ஒரு காலகட்டத்தில் மனோ பாலாவும் கமலும் பேசிக் கொள்வது இல்லை, இதில் கமல் தான் மனோபாலாவை அப்படியே ஒதுக்கிவிட்டார்.
மனோ பாலா இருக்கும் பக்கத்தை கூட திரும்பிப் பார்க்காமல் முகத்தை திருப்பிக் கொண்டு கமல் பலமுறை சென்று இருக்கிறார்" என்றும்.
மேலும், சுஹாசினி இடம் சென்று மனோபாலா கமலை என்னிடம் பேச சொல்லுங்கள் என்று அழுது இருக்கிறார். பின்னர் அவர், "உங்கள் சித்தப்பா உலகத்தில் எல்லோரிடமும் பேசுகிறார். என்கிட்ட பேச மாட்டேன் என்கிறார்" என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து இவர் , "மனோபாலா எப்போதும் மனதில் பட்டதை பேசி விடுவார். அப்படித்தான் ஏதாவது கமல் படம் பற்றி அப்போது பேசியிருப்பார். அதனால் சண்டையாகி இருக்கலாம்".
"ஆனால் மனோபாலாவின் கடைசி காலகட்டத்தில் கமல்ஹாசன் மீண்டும் அவரோடு பேசி பழகி வந்ததாகவும் கூறினார்.
அதனால் தான் மனோபாலாவின் மரண செய்தி கேட்டதும் தன்னுடைய வருத்தத்தை சமூக வலைத்தள பக்கங்களில் உருக்கமாக கமல்ஹாசன் தெரிவித்திருந்தார்" என்றும் அவர் கூறினார்.