கல்யாணத்தின் போது அவரோட அக்கவுண்டில் அவ்வளவு தான் - ரகசியம் உடைத்த சுஹாசினி
திருமணத்தின் போதான அனுபவம் குறித்து நடிகை சுஹாசினி பேசியுள்ளார்.
சுஹாசினி
தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை சுஹாசினி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை தக்க வைத்தார். நடிப்பு மட்டும் அல்லாமல், இயக்கம், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்.
பிரபல இயக்குனர் மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நந்தன் என்கிற மகன் இருக்கிறார் தற்போது, தொலைக்காட்சிகளில் பல பிரபலங்களை பேட்டி எடுத்து வருகிறார்.
திருமணம்
இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ருமணம் ஆன புதிதில் என் கணவரை விட மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தேன். எங்களுக்கு திருமணம் நடக்கும் போது மணி அக்கவுண்டில் வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது.
அப்போது தான் அக்னி நட்சத்திரம், நாயகன் படங்கள் வெளியாகி வளர்ந்து வரும் இயக்குநராக இருந்தார். ஆனால், நான் அவரை விட பிரபலமான நடிகையாக இருந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை ஆதாரமாக உலகை உலுக்கிய No fire zone தமிழில் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil

முள்ளிவாய்காலின் இறுதிக் கணங்கள் : மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயது வந்தவர்களுக்கு மட்டும்) IBC Tamil
