லஞ்சம் கொடுக்காததால் விவசாயிக்கு கள ஆய்வாளரால் நேர்ந்த நிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை

loss farming bribery thirupathur sugarcaneharvest
By Swetha Subash Apr 19, 2022 09:59 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிகுப்பம் அடுத்த புதிய அத்திகுப்பம் பகுதியை சேர்ந்த சிவானந்தன் (60) இவருக்கு சொந்தமான சுமார் 4 ஏக்கர் அளவில் நிலம் உள்ளது. அதில் ஒன்றரை ஏக்கர் அளவில் பொம்மிகுப்பம் பகுதியில் உள்ள யூனியன் வங்கியில் 85000 ஆயிரம் ரூபாய் விவசாயக் கடன் எடுத்து கடந்த ஜனவரி மாதம் கரும்பு சாகுபடி செய்துள்ளார்.

லஞ்சம் கொடுக்காததால் விவசாயிக்கு கள ஆய்வாளரால் நேர்ந்த நிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Sugarcane Fund Denied After Farmer Refused 2 Bribe

இந்த நிலையில் கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு ரூபாய் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் நிலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பாக கரும்பு பயிர் நடவு செய்யப்பட்டு கடந்த 4 மாதங்களுக்கு முன்பே கரும்பு வெட்டப்பட்டு இருக்க வேண்டும்.

கரும்பு பயிர் நடவு செய்யப்பட்டு இருக்கும் போது கள ஆய்வாளர் சக்கரபாணி என்பவர் 5 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதன் காரணமாக கரும்பு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே வெட்டப்பட்டிருக்க வேண்டும் ஆனால் ஆயிரம் லஞ்சம் கொடுக்காத காரணத்தினால் கரும்பு வெட்டுவதற்கான ரசீதை கொடுக்காமல் கள ஆய்வாளர் சக்கரபாணி நான்கு மாதங்கள் இழுத்தடித்து உள்ளார்.

அது மட்டுமின்றி சிவானந்தனுக்கு பின்னாடி கரும்பு பயிரிட்ட பலருக்கு கரும்பு வெட்டப்படும் ரசீது கொடுத்துள்ளார். இதன் காரணமாக நான்கு மாதங்களுக்கு பிறகு கரும்பு வெட்டப்படும் ரசீது கொடுக்கப்பட்டதால் சிவானந்தன் வேலையாட்களை ஒரு டன்னுக்கு 1500 கொடுத்து வெட்டியுள்ளார்.

லஞ்சம் கொடுக்காததால் விவசாயிக்கு கள ஆய்வாளரால் நேர்ந்த நிலை - நடவடிக்கை எடுக்க கோரிக்கை | Sugarcane Fund Denied After Farmer Refused 2 Bribe

இந்த நிலையில் காலதாமதமாக வெட்டப்பட்ட கரும்பின் உள்ளே போரல் ஏற்பட்டு எடை குறைந்து விட்டதாக சிவானந்தன் குற்றம் சாட்டுகிறார். அது மட்டுமல்லாமல் 120டன் கிடைக்க வேண்டிய கரும்பு தற்போது சுமார் 40டன் அளவே கிடைத்துள்ளது.

இதன் காரணமாக தற்போது ரூபாய் 3 லட்சம் அளவில் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அதேபோல் வெட்டப்பட்ட கரும்புகளை எந்த சுகர் மில்க்கு எடுத்துச் செல்வது என்று கூட தெரியவில்லை என்று கூறுகின்றார்.

ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் கொடுக்கவில்லை என்ற காரணத்தால் 3 லட்சம் மதிப்பிலான இழப்பீடு ஏற்படுத்திய கள ஆய்வாளர் சக்கரபாணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.