கரும்பு விவசாயிகளுக்கு மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

AgricultureBudget sugarcanefarmers
By Irumporai Mar 19, 2022 05:55 AM GMT
Report

வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அதில், பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நெல் சாகுபடி நடக்கிறது.

20,000 விவசாயிகளுக்கு ஓராண்டில் ரூ.5 கோடி மதிப்பில் தார்ப்பாய்கள் வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்தார். இதற்கிடையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க, விவசாயிகளின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க குழு அமைக்கப்படும் என தெரிவித்தார்.

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மெட்ரிக் டன்னுக்கு ரூ.195 வழங்கப்படும். கரும்பு விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு ரூ.2950 எனவும், கரும்பு சாகுபடிக்கு உதவியாக ரூ.10 கோடியில் உபகரணங்கள் வழங்கும் திட்டம் என அறிவித்தார்.