உடல் எடையை குறைக்க கண்டிப்பா இதை தவிர்க்கனும் - உலக சுகாதார மையம் எச்சரிக்கை
செயற்கை இனிப்பூட்டிகள் குறித்து உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
artificial sweeteners
இனிப்புக்கான செயற்கை மாற்றாக கொண்டுவரப்பட்டவை தான் artificial sweeteners. இவை மாத்திரைகளாகவும், திரவ வடிவத்திலும், பவுடராகவும் விற்கப்படுகின்றன.
காபி, டீ போன்றவற்றில் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க முடியாது என நினைப்பவர்கள் அவற்றுக்கு மாற்றாக இந்த artificial sweeteners-ஐ தான் பயன்படுத்துகிறார்கள்.
எது நல்லது?
மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள், செயற்கை இனிப்பூட்டிகளின் கலோரிகள் குறைவு என்பதால் சர்க்கரைக்கு பதிலாக இவற்றை விரும்புகின்றனர். இந்நிலையில், உலக சுகாதார மையம், இந்த வகையான இனிப்பூட்டிகள் எந்த வகையிலும் உடல் எடையை குறைக்க உதவாது.
டைப்-2 சர்க்கரை நோய்க்கு இது வழிவகுக்கும். மாரடைப்பு போன்ற இதய நோய்க்கும் இது வழிவகுக்கும். மேலும் இவற்றில் எந்த வித சத்தும் இல்லை என்பதால், மக்கள் இவற்றை புறகணிப்பது நல்லது.
இனிப்பு சுவையை விரும்புவோர் பழங்களிலும் சர்க்கரை உண்டு என்பதால் அவற்றை சாப்பிடுவது நல்லது எனத் தெரிவித்துள்ளது.