சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? அளவு ஏதேனும் உள்ளதா?

coffee SugarPatient SugarPatientCoffee DrinkCoffee சர்க்கரைநோயாளிகள்
By Thahir Mar 06, 2022 11:20 PM GMT
Report

சர்க்கரை நோயாளிகள் அனைவரும் காபி குடிக்கலமா?அப்படியே குடித்தாலும் எவ்வளவு குடிக்க வேண்டும் என்ற கேள்விகள் இருக்கும்.

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். சர்க்கரை நோய் என்று சொல்லக்கூடிய நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டாயம் உணவில் கட்டுப்பாட்டுடன் இருத்தல் அவசியம்.

சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலாமா? அளவு ஏதேனும் உள்ளதா? | Sugar Patient Coffee Drink

அந்த வகையில் சர்க்கரை நோயாளிகள் காபி குடிக்கலமா என்பதை தற்போது பார்க்கலாம் காபி என்பது பொதுவாக உடலையும் மனதையும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் சர்க்கரை நோய் எதிர்காலத்தில் வருவதை கூட தவிர்க்கலாம் என கூறுகின்றன. காபியில் நிறைய ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன.

இது சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இடத்தில் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால்,

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. சர்க்கரை நோய் வரக்கூடாது என்பதற்காக அதிக காபி குடிக்கலாம் என நினைக்கக்கூடாது.

மேலே குறிப்பிட பட்டுள்ளவை நன்மை என்றால் இதில் தீமைகளும் இருக்கின்றன.

ஒரு சில ஆய்வுகளில் காபி குடிப்பதால் இன்சுலின் சுரப்பு குறைவதாகவும் கூறுகின்றன. இதனால் நாளடைவில் டைப் 1 மற்றும் 2 ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமாக காபி குடிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக பிபி ஏற்படும்.

மேலும், வெறும் வயிற்றில் காபி குடிப்பதும் இதய பிரச்சனைகளை அதிகரிக்கும். குடிக்க வேண்டும் என விரும்புவர்கள் காலை உணவுக்குப்பின் காபியை குடியுங்கள். நீரிழிவு நோயாளிகள் காபியை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.