சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய மருந்து இந்த சக்கர வள்ளி கிழங்கு தான் - இவ்வளவு நன்மையா?

Food Diabetes Lifestyle நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோய் Sugarbeet BloodControl சர்க்கரைவள்ளிகிழங்கு
By Thahir Mar 27, 2022 09:32 PM GMT
Report
205 Shares

சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது.

உணவு பழக்க வழக்கங்களில் மாற்றம்,பல நொறுக்கு திணிகள் என அனைத்தையும் உணவாக மாற்றி கொள்ளும் அனைவருக்கும் 45 வயதுக்கு மேல் நீரிழிவு நோய் வந்துவிடுகிறது.

நீரிழிவு நோயளிகள் பலரும் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

சர்க்கரை நோயாளிகளுக்கு முக்கிய மருந்து இந்த சக்கர வள்ளி கிழங்கு தான் - இவ்வளவு நன்மையா? | Sugar Beet Diabetes Food Blood Control

தமிழர்களின் பண்டைய கால உணவான சர்க்கரை வள்ளி கிழங்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

சர்க்கரை நோயாளிகள் பெரும்பாலனோர்கள் இடையே சக்கரை வள்ளி கிழங்கு சாப்பிட்டால் ரத்தத்தில் சக்கரை அளவு அதிகரிக்கும் என்கிற தவறான எண்ணோட்டம் நிலவி வருகிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் எதிர்ப்பு பொருள் உள்ளது. இது கார்போஹைட்ரேட்டில் இருந்து கிடைக்கும் ஸ்டார்ச்சை விட வித்தியாசமானது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அதிலிருக்கும் ஸ்டார்ச் மெதுவாக எரிந்து நீண்ட நேரம் ஆற்றலை அளிக்கும். மேலும் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்காது.