பஞ்சாப்பில் பயங்கரம் - சிவசேனா தலைவர் சுதிர் சூரி சுட்டுக் கொலை...! கடைசி நிமிட அதிர்ச்சி வீடியோ..!
பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸில் சிவசேனா தலைவர் சுதிர் சூரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தலைவர் சுதிர் சூரி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
சிவசேனா தலைவர்கள் கோவிலுக்கு வெளியே போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, கூட்டத்திலிருந்து ஒருவர் துப்பாக்கியை கொண்டு வந்து சுட்டார். 5 முறைக்கு மேல் துப்பாக்கியால் சுடப்பட்டதையடுத்து, சுதிர் சூரி கீழே சுருண்டு விழுந்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவரை சுதிர் சூரியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தீப் சிங் என்ற நபரை போலுசார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதத்தை போலீசார் கைப்பற்றினர்.
இந்த கொலை சம்பவத்திற்கு பஞ்சாப் மாநில பாஜக தலைவர் அஸ்வனி ஷர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது என்றார்.
தற்போது இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குற்றவாளியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Last 2 second#SudhirSuri #shivsenapic.twitter.com/gO9p1c7vH1
— Nikhil thakur (@Nikhil__thakur2) November 4, 2022
#ShivSena leader Sudhir Suri shot dead in Amritsar | "He succumbed to his injuries at the hospital. FIR registered under sections 302 (murder) and accused Sandeep Singh Sunny in custody from the spot; interrogation underway": Punjab DGP Gaurav Yadav | reported by news agency ANI pic.twitter.com/sYIbkyE6Fl
— Md fasahathullah siddiqui (@MdFasahathullah) November 4, 2022