சிறையிலிருந்து நேராக கோவில் சென்ற சுதாகரன் - என்ன வேண்டுதல் தெரியுமா?
பெங்களூரில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து விடுதலையான சுதாகரன், முதல் வேலையாக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார்.
இரு கரங்களை ஏந்தி மனம் உருகி சாய்பாபா சன்னதியில் சுதாகரன் பிரார்த்தனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இனி வரும் நாட்களில் அரசியல் பக்கம் சுதாகரன் திரும்பிக் கூட பார்க்கமாட்டார் என்றும் அவரது நாட்டமெல்லாம் ஆன்மிகப் பக்கம் மட்டுமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சுதாகரன், தண்டனைக் காலம் முடிவடைந்ததால் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி இருந்தாரோ அதே தோற்றத்திலேயே இப்போதும் காணப்படுகிறார். சிகை அலங்காரம் உட்பட எதையுமே கடந்த 4 ஆண்டுகளில் அவர் மாற்றிக்கொள்ளவில்லை.
சாய்பாபா பக்தரான சுதாகரன், வம்பு, வழக்குகளில் சிக்கி அமைதியான வாழ்க்கையை தொலைத்து கைது, சிறை, அபராதம், என அடுத்தடுத்து இன்னல்களை சந்திந்து வந்தார்.

இதனிடையே பாளையங்கோட்டை சிறையில் ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கருத்தில் எடுத்துக்கொண்ட நீதிமன்றம், கூடுதல் தண்டனைக் காலத்தில் 89 நாட்களை கழித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூருவில் முகாம் பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து நேராக சாய்பாபா கோயிலுக்கு சென்று வேண்டுதலை நிறைவேற்றிய சுதாகரன், இன்னும் சென்னை திரும்பவில்லை.