கே.ஜி.எப் குழுவுடன் இணையும் சுதா கொங்கரா : அடுத்த ராக்கி பாய் சூர்யாவா?

Suriya Sudha Kongara
By Irumporai Apr 21, 2022 07:49 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று படத்தின் மூலம் பிரபலமானவர் இயக்குநர் சுதா கொங்கராசூர்யா நடிப்பில் வெளிவந்த சூரைப்போற்றுன் திரைப்படம் மூலம் இன்னமும் தமிழ் மக்கள் மத்தியில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் உள்ள சிறந்த இயக்குநர்களில் ஒருவர் ஆனார் சுதா கொங்கரா .

இந்த நிலையில் சுதாகொங்காரா புதிய படத்தை இயக்க உள்ளார், அந்த படத்தை கேஜிஎப் படத்தை இயக்கும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது.

ஏற்கனவே முன்னதாக சுதா கொங்கரா தான் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக கூறியிருந்த நிலையில் இந்த அறிவிப்பை வைத்து பார்க்கையில், சுதா கொங்கரா அடுத்தாக சூர்யாவை வைத்து தான் படம் இயக்கவுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தில் நடிக்க இருப்பது சூர்யா தானா அல்லது வேறொரு நடிகாரா என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.