எங்கள் காவிரி எங்கள் உரிமை...போர்க்கொடி தூக்கும் கன்னட சூப்பர்ஸ்டார்கள்!!
காவிரி விவகாரம் தற்போது இறுமாநிலத்திற்கு இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், தற்போது அது குறித்து கன்னட சூப்பர்ஸ்டார்கள் சுதீப் மற்றும் தர்ஷன் ஆகியோர் தெரிவித்துள்ள கருத்துக்கள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
காவிரி விவகாரம்
இன்று நேற்று துவங்கிய பிரச்சனையல்ல - தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் தொடர்ந்து காவிரி நதிநீர் பங்கீட்டில் பிரச்சனை தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மத்திய அரசையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தமிழகத்திற்கான தண்ணீரை பெற்று வருகின்றது.
இம்முறையும், கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் படி நடக்கலாம், தண்ணீர் திறக்க மறுத்து வரும் சூழலில், நேற்று உச்சநீதிமன்றம் அதிரடியாக, கர்நாடக அரசு காவிரி நதிநீர் ஆணையத்தின் வழிகாட்டுதலை ஏற்கவேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து கர்நாடகாவில் விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் போர்க்கொடி தூக்கி பிரச்சனை செய்து வரும் நிலையில், அம்மாநிலத்தின் முக்கிய சூப்பர்ஸ்டார் நடிகர்களின் கருத்துக்கள் தற்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
நடிகர்கள் கருத்து
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சுதீப், நண்பர்களே, நம் காவிரி நம் உரிமை. இவ்வளவு ஒருமித்த கருத்துடன் வெற்றி பெற்ற அரசு காவேரியை நம்பும் மக்களை கைவிடாது என்று நம்புகிறேன் என பதிவிட்டு, நிபுணர்கள் உடனடியாக ஒரு வியூகத்தை வகுத்து நீதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றும் நிலம்-நீர்-மொழிப் போராட்டத்தில் நானும் குரல் கொடுக்கிறேன். கர்நாடகத்தை காவேரி அன்னை காக்கட்டும் என பதிவிட்டிருக்கிறார்.
ಸ್ನೇಹಿತರೆ
— Kichcha Sudeepa (@KicchaSudeep) September 20, 2023
ನಮ್ಮ ಕಾವೇರಿ ನಮ್ಮ ಹಕ್ಕು . ಅಷ್ಟು ಒಮ್ಮತದಿಂದ ಗೆಲ್ಲಿಸಿರುವ ಸರ್ಕಾರ ಕಾವೇರಿಯನ್ನೇ ನಂಬಿರುವ ಜನರನ್ನು ಕೈಬಿಡುವುದಿಲ್ಲ ಎಂದು ನಾನು ನಂಬಿದ್ದೇನೆ . ಈ ಕೂಡಲೇ ತಜ್ಞರು ಕಾರ್ಯತಂತ್ರ ರೂಪಿಸಿ ನ್ಯಾಯ ನೀಡಲಿ ಎಂದು ಒತ್ತಾಯಿಸುತ್ತೇನೆ . ನೆಲ -ಜಲ -ಭಾಷೆಯ ಹೋರಾಟದಲ್ಲಿ ನನ್ನ ಧ್ವನಿಯೂ ಇದೆ.
ಕಾವೇರಿ ತಾಯಿ ಕರುನಾಡನ್ನು ಕಾಪಾಡಲಿ.
அதே போல மற்றொரு நடிகரான தர்ஷன், காவிரியில் கர்நாடகாவின் பங்கில் இருந்து தண்ணீரை குறைத்து கூடுதல் தண்ணீரை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் இந்த ஆண்டு மாநிலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டு இந்த நேரத்தில், பாசனப் பகுதிக்கு சேதம் அதிகம், எனவே அனைத்து புள்ளிவிவரங்களையும் கருத்தில் கொண்டு விரைவில் நீதியைப் பெறுவோம் என பதிவிட்டுள்ளார்.
ಕರ್ನಾಟಕದ ಪಾಲಿನ ಕಾವೇರಿ ನೀರಿಗೆ ಕತ್ತರಿ ಹಾಕಿ ಮತ್ತಷ್ಟು ನೀರು ಪಡೆದುಕೊಳ್ಳುವ ಪ್ರಯತ್ನ ನಿರಂತರವಾಗಿ ನಡೆದು ಬಂದಿದೆ. ಈ ವರ್ಷ ನೀರಿನ ಅಭಾವ ರಾಜ್ಯದಲ್ಲಿ ಸಾಕಷ್ಟಿದೆ. ಈ ಸಮಯದಲ್ಲಿ ನೀರಾವರಿ ಪ್ರದೇಶಕ್ಕೆ ಹಾನಿಯಾಗುವ ಸಾಧ್ಯತೆ ಬಹಳಷ್ಟು ಇರುವ ಕಾರಣ ಎಲ್ಲಾ ಅಂಕಿ-ಅಂಶಗಳನ್ನು ಪರಿಗಣಿಸಿ ಆದಷ್ಟು ಬೇಗ ನ್ಯಾಯ ಸಿಗುವಂತಾಗಲಿ.
— Darshan Thoogudeepa (@dasadarshan) September 20, 2023