பாஜக அண்ணாமலையுடன் போட்டோ எடுத்த காவலர் திடீர் இடமாற்றம்
police
bjp
annamalai
Aravakurichi
By Jon
அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் போட்டோ எடுத்துக்கொண்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டி காவல்நிலைய முதல்நிலை காவலராக இருந்தவர் குணசேகரன். இவர் தாராபுரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட பிரச்சாரத்தில் பணியில் ஈடுபட்டார்.
இந்த பொதுக்கூட்டத்திற்கு தமிழக முதல்வர், துணைமுதல்வர், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பிரச்சாரம் முடிந்ததும் தாராபுரத்தில் பிரச்சாரத்திற்கு வந்தபோது அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையுடன் குணசேகரன் போட்டோ எடுத்துக்கொண்டார். இதனையடுத்து, காவலர் குணசேகரன் ஆயுதப்படைக்கு திடீரென்று மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.