திருப்பத்தூரில் திடீர் மழை காரணமாக மழைநீரோடு கழிவு நீர் கலந்து மக்கள் அவதி
திடீரென கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது கழிவு நீருடன் மழைநீரும் சேர்ந்து வீடுக்குள் புகுந்ததால் மக்கள் அவதி.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் பொன்னேரி, ஏலகிரி மலை, மற்றும் ஆலங்காயம் பகுதியில் உள்ள வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தன.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது திருப்பத்தூரில் உள்ள கலைஞர் நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள மக்கள் அவதிக்கு உள்ளாகினர்.
கால்வாய்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் பல முறை நகராட்சியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மழைக்காலம் இதுபோன்று நிகழ்வுகள் ஏற்படுவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றன.
மேலும் காலை முதலே வெயில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் திடீரென மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.