தமிழகத்தில் பால் விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி

Chennai
By Thahir Aug 12, 2022 04:13 AM GMT
Report

தமிழகத்தில் இன்று முதல் தனியார் பால் பாக்கெட் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

பால் விலை திடீர் உயர்வு 

தமிழகத்தில் நாள்தோறும் 16.41கோடி லிட்டர் பால் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் 1.25 கோடி லிட்டர் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது.

ஆவின் பாலை விட தனியார் நிறுவன பாலின் விலை அதிகமாக உள்ளது. கடந்த மே மாதத்தில் தனியார் பால் மற்றும் தயிர் விற்பனை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக தனியார் பால் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பால் விலை திடீர் உயர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி | Sudden Increase In Milk Prices In Tamil Nadu

அதன்படி, ஹட்சன் நிறுவனம் இன்று முதல் பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆவின் நிறுவனம் வெறும் 16 சதவீதம் மட்டுமே பங்களிப்பு தருகின்றது. மீதம் 44 சதவீதம் தனியார் நிறுவனங்கள் பங்களிப்பதால் தன்னிச்சையாக அவை விலையை உயர்த்துகின்றன.

இதனால் பால் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பால் முகவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே இன்று முதல் ஹட்சன் நிறுவனத்தின் பால் மற்றும் தயிர் லிட்டருக்கு நான்கு ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.