கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் திடீர் தீ விபத்து
hospital
corona
fire
Maharashtra
By Jon
மராட்டிய மாநிலத்தில் கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் உண்டானது. மராட்டிய மாநிலம் நாகபூரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த மருத்துவமனையில் திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சைப்பெற்று வந்த 27 நோயாளிகளும் பாதுகாப்பாக வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர் . அவர்களின் உடல்நிலை குறித்து இப்போது நாங்கள் கருத்து தெரிவிக்க முடியாது என மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் தெரிவித்தனர்.