அதிமுகவிலிருந்து மூன்று பேர் திடீர் நீக்கம் : காரணம் இதுதான்

stalin edappadi dhinakaran aiadmk
By Jon Mar 24, 2021 05:12 PM GMT
Report

கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் மூன்று பேரை அதிமுகவில் இருந்து நீக்கி முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் அதிமுகவின் கொள்கைக்கு முரணான வகையில் செயல்பட்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத்தொகுதில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ள காரணத்தாலும், மதுரை மாநகர் மாவட்டத்தை சேர்ந்த ச.கிரம்மர் சுரேஷ், புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த சி.அழகுசுப்பையா மற்றும் விருதுநகர் மேற்கு மாவட்டத்தை சேர்ந்த கோகுலம் எம்.தங்கராஜ் ஆகிய மூன்று பேரும் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்சி உறுப்பினர்கள் யாரும் இவர்களுடன் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.