தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போட்டவர் திடீர் மரணம்

corona vaccine
By Fathima Apr 15, 2021 09:52 AM GMT
Report

நெல்லையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சில நாட்களில் நபர் ஒருவர் திடீரென மரணமடைந்தது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.

நெல்லை டவுன் கூலக்கடை பஜாரை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன்(வயது 45), கூலித்தொழிலான முத்துகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார்.

மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி முத்துகிருஷ்ணனிடம் கூறியுள்ளனர், இதன்படி அவரும் தடுப்பூசியின் முதலாவது டோஸை போட்டுக் கொண்டார்.

தொடர்ந்து சில மணிநேரங்களில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது, அது தீவிரமான நிலையில், திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

தடுப்பூசி போட்டதால் தான் முத்து கிருஷ்ணன் உயிரிழந்துவிட்டார் என்றும், முறையாக விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து தடுப்பூசி போட்டதால் தான் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனை உள்ளதா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.