தொடர் ராணுவ தாக்குதலால் பதற்றம் - தாக்கப்பட்ட இந்தியர்கள்!

Sudan
By Sumathi Apr 17, 2023 10:52 AM GMT
Report

சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் தொடர்ந்து வருகின்றது.

ராணுவ தாக்குதல் 

சூடான் நாட்டில் ராணுவ ஆட்சி நடந்து வருகின்ற நிலையில், ராணுவமும் துணை ராணுவமும் மோதி கொண்டது. இரு தரப்பினரும் குண்டுவீச்சில் ஈடுபட்டனர். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

தொடர் ராணுவ தாக்குதலால் பதற்றம் - தாக்கப்பட்ட இந்தியர்கள்! | Sudans Army Paramilitary Strikes In Power Struggle

இந்த மோதலில் இந்தியர் உள்பட 56 பேர் உயிரிழந்தனர். 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். தொடர்ந்து, ஹர்டோம்மில் உள்ள அதிபர் மாளிகை, சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக துணை ராணுவம் கூறியுள்ளது.

தொடர் மோதல்

மேலும், நைல் நதியின் குறுக்கே ஆர்.எஸ். எப் தளம் மீது பீரங்கிகள் மற்றும் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து, கபூரி, ஷார்க் எல் மாட்டங்களில் துணை ராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நடந்துவரும் இத்தாக்குதலில் மனிதாபிமானம் அடிப்படையில் காயம் ஏற்பட்டவர்களை வெளியேற்ற ஒரு மணி நேரம் சண்டையை நிறுத்துவதற்கு ராணுவமும் துணை ராணுவமும் ஒப்புதல் அளித்துள்ளது.