சூடானில் நிலவும் பதற்றம் - வங்கிக்குள் புகுந்து கட்டு கட்டாக பணத்தை துாக்கி செல்லும் மக்கள்

Sudan
By Thahir Apr 30, 2023 07:11 AM GMT
Report

சூடானில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு போரால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.

ஆப்ரேஷன் காவேரி

சூடான் நாட்டில் ராணுவத்தினருக்கும் துணை ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது, இந்த மோதல் பெரும் வன்முறையாக மாறியது. இதனால் அங்கு கிட்டத்தட்ட 1800க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Sudanese people break into banks and steal money

அங்கு உள்ள வெளிநாட்டவர்கள் நாடு திரும்புவதற்காக போர் நிறுத்தம் அமலானது. மேலும் அங்கு சிக்கி உள்ள வெளிநாட்டவர்களை மீட்பதற்கு அந்தந்த நாடுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதுபோல “ஆப்ரேஷன் காவேரி” என்ற பெயரில் இந்தியாவும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

வங்கிக்குள் புகுந்து பணத்தை அள்ளிச் செல்லும் மக்கள் 

இதனிடையே, அந்த நாட்டில் பெரும்பாலான உணவு பொருட்கள் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளது, அந்நாட்டில் வசிக்கும் மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அங்கு வாழும் மக்கள் உணவு, தண்ணீர் இல்லாமலும், தனது உடமைகளை இழந்தும் பரிதாப நிலையில் உள்ளனர்.

Sudanese people break into banks and steal money

மேலும் அங்கு உள்ள மக்கள், கார்டூம் நகரத்தில் உள்ள ஒரு வங்கியில் பணத்தை கட்டு காட்டாக எடுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.